கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தங்கம் விலை ஏற்ற தாழ்வுகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கும், சவரனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 1,19,680-க்கும் விற்பனையானது.
அதே நேரம் இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 370 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,330-க்கும் சவரனுக்கு ரூ. 2,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,22,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன் படி வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு தங்கமானது கிராமுக்கு ரூ. 280 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,610-க்கும் சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,24,880-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல, வெள்ளியின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.400-க்கும், ஒரு கிலோ ரூ.13,000 உயர்ந்து ரூ. 4,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







