இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கான்வே- டிம் சீபராட் இணை சிறப்பாக விளையாடினர். டிம் சிபாராட் 36 பந்துகளில் 62 ரன்களும், கான்வே 23 பந்துகளில் 44 ரன்களும் விளாசினர். மேலும் மற்றொரு ஆட்டக்காரரான டேரில் மிட்செல் 18 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார்.
இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியுள்ளது.







