தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி சார்பில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் திமுகவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதனிடையே திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்பவதாக தகவல்கள் பரவின. அதே போல் கட்சி நிர்வாகிகளும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வந்தனர். இதையடுத்து கூட்டணி குறித்து பொது வெளியில் கருத்துக்கள் தெரிக்க கூடாது என்று கட்சி தலைமை உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்துள்ளர். டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் பேச்சு வார்த்தை நடந்த வருவதாக கூறப்படுகிறது.







