உலமாக்களுக்கான ஓய்வூதியம் உயர்வு – முஸ்லீம் லீக் மாநாட்டில் முதலமைச்சர் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்……!

தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணத்தில்  நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில்  இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாடு நடைபெற்றது. ’சிறுபான்மை உரிமையை காப்போம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தொடர்ந்து மாநாட்டில் பேசிய அவர் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் ;

1 தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு பெற்றுள்ள வர்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000-ஆகவும் குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

2. உலமாக்கள் நல வாரியத்தில் உள்ள உலமாக்களில் ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க அரசு மானியத்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

3. சென்னை மற்றும் மதுரையில் வக்பு தீர்ப்பாயம் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் கோயம்புத்தூரில் கூடுதலாக வக்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.

4. இஸ்லாமியர்களுக்கான கல்லறை தோட்டம் மற்றும் கப்ரிஸ்தான் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் இடங்கள் அடையாளம் காணப்படும்.

5. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கக்கூடிய 10 உருது மொழி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.