தங்கம் விலை சற்றே குறைவு – இன்றைய நிலவரம் என்ன…?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடம் காணப்பட்டு வருகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒருகிராம் ரூ.13,560-க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480-க்கும் விற்பனை செய்யப்பது. அதேபோல சில்லறை வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கத்தின் இன்றும் சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.13,400-க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி சில்லறை வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.