இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம்!

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்

பிரிட்டிஷ் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய  இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக ‘திராவிடமணி’ இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த இலண்டனில் இருந்து அவரது பிறந்தநாளில் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

நம் மண்ணில் தீண்டத்தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டைமலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயானபூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக்கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என #DravidianModel ஆட்சியில் பெயர் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.