சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி போராட்டம் நடத்தப்படும் – மு.க.ஸ்டாலின்!

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்

சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.

மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.

காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.

வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.

த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.

தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.

சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும்
திமுக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.