ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனுஷின் ‘வாத்தி’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய திரைப்படங்களின் இயக்குநரான வெங்கி அட்லுரி இயக்குகிறார். நாகவம்சி தயரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் மமிதா பைஜு, நடிகைகள் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்திற்கு ’விஸ்வநாத் & சன்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”வித்தியாசத்துடன் காதல், ஒரு நோக்கத்துடன் குடும்பம் – ஜூலை மாதத்தில் ஒரு முழுமையான பொழுதுபோக்காக நாங்கள் வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.








