உலக முதலீட்டாளர்கள் மாநாடு – சிங்கப்பூர் நாட்டிலுள்ள நிறுவனங்களின் சார்பாக 5 பில்லியன் டாலர் முதலீடு!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நாட்டிலுள்ள நிறுவனங்களின் சார்பாக 5 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு செய்வது தொடர்பான  ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது.  உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம்…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நாட்டிலுள்ள நிறுவனங்களின் சார்பாக 5 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு செய்வது தொடர்பான  ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது. 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.  இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்:  வெளியானது மிஷன் திரைப்படத்தின் டிரைலர்!

இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.  மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.  இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நாட்டிலுள்ள நிறுவனங்களின் சார்பாக 5 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு செய்வது தொடர்பான  ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.