“தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” :ஜி.கே.வாசன்

தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர்,…

தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பெற்று கொடுக்கும் வகையில் நட்பு பாலமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விளங்கி வருவதாக கூறினார்.

மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருவதால், அதிமுக ஆட்சியே, 3வது முறையாக தொடர மக்கள் முடிவெடுத்து விட்டதாகவும் பரப்புரையில் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார்.

மேலும், மகளிருக்கான அதிக திட்டங்களை கொடுத்ததலில் தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது என்றும் மக்களின் சுமையை குறைக்க வேண்டும், கஷ்டங்களை குறைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக தேர்தல் அறிக்கை உள்ளது என தெரிவித்தார் . இலவசமாக கொடுக்க மனம் இருந்தால் மட்டும் போதாது நல்ல குணமும் வேண்டும் என கூறிய ஜி.கே.வாசன் திமுகவிடம் இல்லாத மனமும்,குணமும் அதிமுகவிடம் உள்ளது எனவும் அதிமுகவிற்கு வாக்களித்தால் வளர்ச்சி தரும்,வாழ்வு தரும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.