16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை – கனடா முடிவு…!

கனடாவில் 16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய சட்டத்தை அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளவில் சமூக வலைதளங்களில் பதின்ம வயதிற்குபட்டோருக்கான தடை நிகழ்ந்து வருகிறது. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் 16 வயதிற்குட்பட்டோர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ், டென்மார்க் மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் பதின்ம வயதினருக்கான சமூக வலைதளங்களை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது.

இந்த நிலையில் கனடா அரசு ‘டிஜிட்டல் பாதுகாப்பு சட்டம்’ என்கிற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் கனடாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடை செய்யப்படுகிறது.

சிறார்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட அந்தரங்கப் படங்கள் உள்ளிட்ட ஏழு வகையான தீங்குகளில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது.

மேலும் கனடாவில் டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம் என்ற புதிய ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்படும் என்றும் சட்டத்தில் விலக்குகள் எப்படி இருக்கும் என்பதற்கான அளவுகோல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.