ரூ.15 லட்சம் கவுன்: வைரலாகும் சாரா அலிகானின் ஃபோட்டோ ஷூட்

நடிகை சாரா அலிகான் தனது இஸ்டிராகிராமில், ’சிண்ட்ரெல்லா ஸ்டோரி’ ( Cinderella Story ) என்ற பெயரில் வெளியிட்ட ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் அவர் அணிந்திருக்கும் ஆடையின் மதிப்பு…

நடிகை சாரா அலிகான் தனது இஸ்டிராகிராமில், ’சிண்ட்ரெல்லா ஸ்டோரி’ ( Cinderella Story ) என்ற பெயரில் வெளியிட்ட ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் அவர் அணிந்திருக்கும் ஆடையின் மதிப்பு ரூ 15,72,967 ஆகும்.

முன்னணி இந்தி நடிகர் சைஃப் அலிகானின் மகளும் நடிகையுமான சாரா அலிகான் சமீபத்தில் அவர் எடுத்த ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

நீல நிறத்தில், அலங்காரஜரிகைகள் வைத்து உருவாக்கப்பட்ட கவுனில்( Gown) சாரா அலிகான் ’ சிண்ட்ரெல்லா’ போல் காட்சியளிக்கிறார். இந்த ஆடையை நார்வேஜியன் (Norwegian) ஆடை வடிவமைப்பாளரான கிரிஸ்டையின் ஆட்னிவிக் (Kristian Aadnevik) வடிவமைத்துள்ளார். கிரிஸ்டையின் ஆட்னிவிக்கின் பிரெத்தியேக பிராண்டான ’ஆட்னிவிக்’ -க்கு (Aadnevik) இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவர்களது தனித்துவம் வாய்ந்த ஆடை கலெக்‌ஷனில் ( collection) இந்த ஆடையும் ஒன்று. இந்த ஆடையின் மதிப்பு ரூ 15,72,967 ஆகும். மேலும் இந்த ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூகவலைதளங்கில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.