இயக்குநர் பாரதிராஜாவின் உடல் இன்று நல்லடக்கம்…!

இயக்குநர் பாரதிராஜாவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா நேற்று காலமானார். இதனை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ஏராளமான திரைத்துறை, அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

பாரதிராஜாவின் உடல் நேற்று இரவு சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியில் பாரதிராஜாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மாலை 3 மணி அளவில் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.