திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

தமிழ் நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ள தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

தேர்தலின் போது முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். விதிகளின் படி ஒருவர் இரண்டு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு கட்சியில் பிளவு உண்டானது. சமரச முயற்சிகளால் மீண்டும் அணிகள் இணைந்தன. இதற்கிடையில் அதிமுக எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டு அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை வரும் 22-ந்தேதிக்குள் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும் தேர்தல் உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும். உதவி அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இதனை திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம்,தாராபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்க்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.