பிப்ரவரி 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. கூடுதல் இருக்கை எண்ணிக்கை விவரங்கள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.







