வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் தமிழகத்தில் அரசு ஆட்சி புரிந்து வருவதாக கூறிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக கூட்டணியுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவிததார்.
எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவதற்கான உரிமை அதிமுகவிற்கு மட்டுமே உள்ளதாக கூறிய அவர், சசிகலா விடுதலையால் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படாது எனவும் ஜிகே வாசன் தெரிவித்தார்.







