விசாகப்பட்டினம் அருகிலுள்ள சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜூவாக்கா தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்நிலையில், அங்குள்ள சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யும் தனியார் நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. மேலும், நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து, இருப்பு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் மீதும் பரவி பயங்கர தீ விபத்தாக மாறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தவிர அங்கு எண்ணெய் லோடுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளும் தீக்கிரையாகின. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு 10 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சமையல், பூஜை எண்ணெய் உட்பட 10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.