விருதுநகரில் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளின் செல்போனை ஹேக் செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்பு படமாக 8323385126 என்ற நம்பரில் பயன்படுத்தி (whatsapp profile picture) விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு whatsapp மூலம் ஒரு கும்பல் கால் செய்து வருகிறது. மேலும் அரசு அதிகாரிகளின் மொபைல் போனை ஹேக் செய்து வருகிறார்கள்.
எனவே இந்த மொபைல் எண் மாவட்ட ஆட்சியரின் நம்பர் இல்லை மற்றும் இது போல் மாவட்ட ஆட்சியரின் profile picture – ருடன் வரப்பெறும் அழைப்புகளை தவிர்க்குமாறும்,
அழைப்புகளை ஏற்று பேச முயன்றால் தங்களது மொபைல் போன் மற்றும் அதில் உள்ள டேட்டாக்கள் அனைத்தும் ஹேக்கர்களால் ஹேக் செய்து மோசடி செய்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதனால் எச்சரிக்கையுடன் இருக்கும் படி. அனைத்து அலுவலர்களையும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஹேக் செய்யும் கும்பல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என பேரிடர் மேலாண்மை, வட்டாட்சியர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்








