முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ் ட்ராமா போட்டு கொண்டிருக்கிறார்- கோவை செல்வராஜ்

சம்பாதித்த பணத்தை காப்பாற்றி கொள்ள 30 அமைச்சர்களை வைத்து இபிஎஸ் ட்ராமா போட்டுக் கொண்டிருக்கிறார் என என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஓபிஎஸ் அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கபட்ட கோவை செல்வராஜ், இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு கோவை செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலிலதா காலத்தில் அதிமுக கோட்டையாக வைத்திருந்ததை சென்ற உள்ளாட்சி மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் 100 வார்டுகளில் 90 வார்டுகளில் படுதோல்வியை சந்திக்க வைத்தும் பேரூராட்சி, கிராம ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வியைப் பெற்றுத் தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி இல்லாதவர்கள் என விமர்சித்தார்.

கோவை மாவட்டத்தில் கட்சி அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என கூறிய அவர், அதிமுகவை கட்டிக் காப்பாற்ற கிராமத்தோறும் தொண்டர்களை இணைத்து அண்ணா பிறந்த நாளை தனது தலைமையில் சைக்களில் பேரணி நடத்த உள்ளதாகவும், வரும் செப்டம்பர் மாதம் ஓபிஎஸ் தலைமையில் வஉசி பூங்காவில் பிரம்மாண்ட கூட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 11-ம் தேதி நடந்த பொதுக்கூட்டம் செல்லாத கூட்டம் எனவும் அந்த பொது கூட்டத்தில் இ.பி.எஸ்.ஐ தேர்ந்தெடுத்ததும் செல்லாது, இபிஎஸ் நீக்கியதும் செல்லாது, இபி.எஸ்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 1.12.2021 அன்று அதிமுக தீர்மானத்தில் இருந்த பட்டியல் தான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. இவர்கள் தேர்ந்தெடுத்ததை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. பட்டா இல்லாத லேண்டாக இபிஎஸ் கட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். பட்டாவோடு ஓபிஎஸ் அதிமுகவை நடத்திக் கொண்டிருக்கிறார் எனவும் விமர்சித்தார்.

அதிமுக என்பது ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தலைமையில் சென்று கொண்டிருக்கிறது. எந்த அங்கீகாரம் தரப்படாத காரணத்தால் 72 பேரை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறோம். அவர்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓ.பி.எஸ் வரும் 20-ம் தேதிற்கு மேல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவத்த செல்வராஜ் கட்சி லுவலகம் தொடர்மான கேள்விக்கு, நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க கூடாது, நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் எனவும் பதிலளித்தார்.

கட்சி சட்டவிதிப்படி ஓ.பிஎஸ் தலைமையில் அதிமுக இன்று இயங்கி கொண்டு இருக்கிறது. அதிமுக தொண்டர்கள் நடுநிலையோடு இருக்கிறார்கள், சம்பாதித்த பணத்தை காப்பாற்றி கொள்ள 30 அமைச்சர்களை வைத்து இபிஎஸ் டிராமா போட்டுக் கொண்டிருக்கிறார். ட்ராமா வெட்ட வெளிச்சம் ஆகும் போது, ராஜபக்சேவை விரட்டியடிப்பது போல இபிஎஸ்-ஐ தொண்டர்கள் விரட்டியடிப்பார்கள் என சாடினார்.

ஒருவார காலத்திற்குள் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தெளிவாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அனைத்து தொண்டர்களும் என்னை வரவேற்க வருகிறார்கள். ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிறைய இருக்கிறது. மூன்று மாதத்திற்கு பிறகு ஓபிஎஸ் தொண்டர்கள் கொண்ட கட்சியை நடத்துவார், அவர்கள் குண்டர்கள கொண்ட கட்சியை நடத்துவார்கள். பாஜக தோழமை கட்சி தான்,பாஜக சொல்வதை கேட்டு நடக்க வேண்டிய அவசியமில்லை எனவும் மக்கள் நலனுக்காக பிரதமரை சந்திதோம் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை ஆதீனம் அரசை ஏற்றுக்கொள்வார்: அமைச்சர்

EZHILARASAN D

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா; மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

Halley Karthik

பிரதமரின் வாரணாசி அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயற்சி; 4 பேர் கைது!

Jayapriya