இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ம் தேதி வெளியாகிறது.
இயக்குனர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது ” எனும் படத்தை இயக்கியிருந்தார். காளிதாஸ் ஜெயராம், கலையரசன் துஷாரா, ஹரி, ஷபீர், வினோத், மைம்கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வித்தியாசமான கதைக்கருவில் உருவாகியிருக்கும் இந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது. ஆகஸ்ட் 31ம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
#NatchathiramNagargiradhu in theatres near you from August 31st!@officialneelam @vigsun @Manojjahson @YaazhiFilms_ @thinkmusicindia pic.twitter.com/wZ8dMVljpv
— pa.ranjith (@beemji) August 4, 2022
இத்திரைப்படத்தை யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படித்திற்கு ஒளிப்பதிவு கிஷோர்குமார், இசை டென்மா, எடிட்டிங் செல்வா RK, கலை ரகு, நடனம் சாண்டி, சண்டைப்பயிற்சி ஸ்டன்னர் சாம் உள்ளிட்ட பல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிந்துள்ளனர்.