சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகத்தின் தவறான அணுகுமுறையின் காரணமாகத் தான் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீமதியினுடைய மரணம் உயிரிழப்பு அல்ல, இயற்கையான மரணமும் அல்ல என்று உறுதியாகக் கூறப்படுகிறது எனத் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதால், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு உண்மையான காரணத்தை முற்றிலும் அறிய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மரணத்தில் பள்ளி நிர்வாகத்தினர் ஏதோவொரு வகையில் சம்மந்தப்பட்டிருப்பதாக உறுதியான தகவல்கள் கூறுவதாகவும், சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவி ஸ்ரீமதி மரணம் என்பது உயிரிழப்பு அல்ல என்கிற காரணத்தினால், இதில் சம்மந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரையும் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உண்மையை வெளியே கொண்டு வந்தால் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், இதில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.








