‘ஆண்களுக்கு இலவச பேருந்து வசதி’… ‘மகளிருக்கு மாதம் ரூ.2000’ – தேர்தல் வாக்குறுதியில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150நாட்களாக உயர்த்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வாக்குறுதிகளில் அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

“ரேசன் அட்டையில் உள்ள குடும்பப்பெண்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.2000 செலுத்தப்படும்.

100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150நாட்களாக உயர்த்தப்படும்.

மகளிர் நலன் குலவிளக்கு திட்டத்தின் மூலம் மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி வீடு கட்டி தரப்படும்.

ஆண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

5 லட்சம் மகளிருக்கு ரூ.25,000 மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.