நேபாள பெருவெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 1,388ஆக உயர்வு!

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1388ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த 26ம் தேதி காலை சுமார் 8:30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன. வெள்ளப்பெருக்கு காரணமாக, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற 19 பாலங்களும், 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளன.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழ்நாட்டில் இருந்து கைலாஷிற்கு சுற்றுப்பயணம் சென்று வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.பேரிடர் உபகரணங்களை வாங்குங்கள்

இந்த நிலையில், பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1388ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்து அடையாளம் காண முடியாத வகையில் உள்ளன. மேலும், 85 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 320 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 4,898 பேர் காணாமல் போய்யுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 12,000 திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.