தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் – விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு!

தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவனுக்கு, அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தவெக ஆதரவுத் தலைவர்களின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பினை, தவெகவைச் சேர்ந்த அமைச்சர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் நேரில் வழங்கி அழைப்பு விடுத்துள்ளனர்.

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் போது, வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.