என் மீது போடும் வழக்குகளை சந்திக்கத் தயார்: முன்னாள் அமைச்சர் வேலுமணி

என் மீது போடப்படும் வழக்குகளைச் சந்திக்க தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய விடியோ, சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின்…

என் மீது போடப்படும் வழக்குகளைச் சந்திக்க தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய விடியோ, சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தன் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயாராக உள்ளதாக பேசி உள்ளார்.

தேர்தல் வெற்றிக்கு பின் முன்னாள் அமைச்சர்கள் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்காக திமுக முயன்று வருகிறது என்றும் எதற்கும் தயாராக தாங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக, நான் காண்டு காலம் ஆட்சி நீடிக்க தங்கமணியும், நானும் முக்கிய காரணமாக இருந்ததால் என் மீது கவனம் செலுத்தினார்கள் என்றும் கோவை பிரச்சாரத்திலும் அதை வெளிப்படுத்தினார் கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே சிறையில் இருந்தவர்தான் என்றும் என் மீது எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளதாகவும் அவர் அதில் பேசியுள்ளார். அவர் பேசிய விடியோ காட்சிகள் இப்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.