செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் வரை, வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிலம்பு சிறப்பு ரயில் இயக்கப்படும் நாட்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் மும்முறை சிலம்பு சிறப்பு ரயில் இயக்கப்படும் நாட்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வண்டி எண் 06182 செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் மும்முறை சிலம்பு சிறப்பு ரயில் தற்பொழுது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் செப்டம்பர் 23 முதல் வியாழன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்பட இருக்கிறது. அதே போல வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் வண்டி எண் 06181 சென்னை – எழும்பூர் செங்கோட்டை வாரம் மும்முறை சிலம்பு சிறப்பு ரயில், செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட இருக்கிறது.