கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட கழக துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், இன்று முதல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.