முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

ரஜினி – மோகன்பாபு நட்பு தூய்மையானது, ஆழமானது: நடிகை லட்சுமி மன்சு !

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மோகன்பாபுவின் நட்பு தூய்மையானது, ஆழமானது என்று மோகன்பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மன்சு தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் நெருங்கிய நண்பர்கள். ஆரம்ப காலத்தில் இருவரும் சென்னையில் ஒன்றாக சினிமா வாய்ப்புகளைத் தேடியவர்கள். பின்னர் மோகன்பாபு தெலுங்கிலும் ரஜினிகாந்த் தமிழிலும் ஹீரோவானார்கள். தமிழில் சில படங்களில் நடித்துள்ள மோகன்பாபு, சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ’சூரரைப் போற்று’ படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்திருந்தார். அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் இவர்கள் இப்போது புதிய போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளனர்.

இதை மோகன்பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மன்சு, ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ் என்ற டைட்டிலில் இந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ’அண்ணாத்த’ ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றிருந்த ரஜினிகாந்த், அங்கு மோகன்பாபு வீட்டில் இரண்டு நாள் தங்கியிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் அங்கு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அதே புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோகன்பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மன்சு, ரஜினி மற்றும் மோகன்பாபுவின் நட்பு தூய்மையானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: மோகன்பாபு – ரஜினிகாந்த் இருவரையும் பார்க்கும்போது நீண்டகால நட்புக்கான நம்பிக்கை எனக்குக் கிடைக்கிறது. ஒரு டீயை இரண்டு பேரும் பகிர்வது முதல், கார் ஷெட்டில் வாழ்ந்த காலம் வரை எளிமையான குடும்பத்தில் இருந்து வளர்ந்தவர்கள். இப்போது அவர்கள் சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும் நேரம் கிடைக்கும்போது, சந்தித்துக் கொள்கின்றனர். ஒருவருக்கு பிரச்னை என்றால், மற்றவர் அழைத்துப் பேசுகிறார்.

எங்களை விட்டு விலகி அவர்கள் இருவரும் நடந்துவிட்டு வந்ததைப் பார்க்கும்போது அழகாக இருந்தது. அவர்கள் என்ன பேசினார்கள் என்று ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். ஆனால், இந்த நட்பைக் கண்டு மகிழ்கிறேன். இதுபோன்ற தூய்மையான, ஆழமான, இணக்கமான நட்பு எனக்கும் கிடைக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித் துள்ளார்.

Advertisement:

Related posts

”திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் கெத்து நடைபோடும்”-மு.க.ஸ்டாலின்!

Jayapriya

விரட்டும் வறுமை: விருதுகளை விற்று மருத்துவச் செலவு செய்த பிரபல நடிகை!

Karthick

தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் நெருக்கடி: பாரதிராஜா குற்றச்சாட்டு!

Nandhakumar