முக்கியச் செய்திகள் தமிழகம்

சொன்னதை செய்துகாட்டிய முதல்வர் ஸ்டாலின்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேர் உள்பட 17 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவியேற்ற 14-வது நாளிலேயே கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலைக்கான பணி ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

பொதுவாக தேர்தலின்போது தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் மக்கள் மனதிலிருந்து நீங்குவதற்கு முன்பே அதனை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதுதான் ஆட்சியர்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்பை தற்போது தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை விதையை ஊன்றியுள்ளது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தகுதிக்குரிய வேலை வழங்கியிருப்பது.

தூத்துக்குடியில் கடந்த மார்ச் 21-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களுடைய கல்வித் தகுதிக்குரிய வேலை நிச்சயமாக நம்முடைய ஆட்சியில் வழங்கப்படும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்”என்றார்.

அதற்கேற்றார் போல் பதவியேற்ற 14-வது நாளிலேயே பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் கல்விக்கேற்ற தகுதியான அரசு பணி ஆணையை அவர் வழங்கியுள்ளார்.

அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றும் பலியான குடும்ப உறுப்பினர்கள் தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்பி கனிமொழிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அதில் ‘தங்களுக்கு முந்தைய அரசு வழங்கிய வேலை கல்வித் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. அரசு வேலை வழங்கப்பட்டதில் பாரபட்சம் உள்ளது. தங்களுடைய தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்கப்படவேண்டும்” என கோரிக்கை கடிதத்தை வழங்கியிருந்தனர்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சியின்போதே பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணி வழங்கக்கோரி எம்பி கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 17 பேரின் குடும்பங்களுக்குத் தகுதியான அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்ற பிறகு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறிய முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் ‘‘உங்களுக்கு உண்மையாக இருப்பேன், உங்களுக்காகவே உழைப்பேன் என்றென்றும் என் சிந்தனையும் செயலும் மக்களுக்காகத்தான்’’ என்ற வார்த்தைகளை நினைவுகூர்வதைத் தவிர்க்கமுடியவில்லை.

Advertisement:

Related posts

கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,329 பேர் பலி!

Vandhana

பதக்கம் பெற்ற படைவீரரின் பரிதாப நிலை!

Karthick

ம.நீ.ம கட்சியிலிருந்து கமீலா நாசர் நீக்கம்!

Karthick