சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!

தொட்டபெட்டாவிற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும், தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலைச்சிகரத்தில்…

தொட்டபெட்டாவிற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும், தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அமைந்துள்ள தொலைநோக்கி காட்சி முனையை காணா நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பாஸ்ட் டேக் நுழைவு கட்டண சோதனை சாவடியின் இருபுறமும் ஏற்பட்டு வந்த போக்குவரத்து பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாஸ்ட் டேக் மற்றும் சோதனை சாவடியை மாற்று இடத்திற்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதேபோல் சோதனை சாவடிக்கு தரைக்கீழ் கேபிள் ஓயர்கள் அமைக்கும் பணிகளும், சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதையும் படியுங்கள் : #Gaza மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி! 90 சதவீதம் பேர் புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா தகவல்!

நுழைவு கட்டணம் மற்றும் சோதனை சாவடி அமைப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த 20ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு 22ம்
தேதி வரை தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை
விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் சோதனை சாவடி அமைக்கும் பணிகள் முடிவடையாததால் இன்றும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.