முக்கியச் செய்திகள் செய்திகள் வாகனம்

முன்னணி கார்களுக்கான விருது வழங்கும் விழா: பரிந்துரைப்பட்டியல் வெளியீடு

உலக முன்னணி கார்களுக்கான விருது வழங்கும் விழா ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. 5 பிரிவுகளுக்கு கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஐந்து பிரிவுகளின் கீழ் போட்டியிடும் கார்களின் மூன்று பரிந்துரைகள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

கார்களை பற்றிய மதிப்பீடுகளையும், அதன் செயல்திறைனை பற்றி ஆய்வு செய்யும் 93 சர்வதேச நிபுணர்கள் இவ்விழாவின் நடுவராக இருந்து இப்பட்டியலை தயார் செய்துள்ளனர்.

இந்த விருது விழாவின் 5 பிரத்தியேக பிரிவுகள் பின்வருமாறு:

2021ஆம் ஆண்டிற்கான முன்னணி கார் (World Car of the Year), உலகத்தின் முன்னணி நகர்புற கார் ( World Urban Car), முன்னணி ஆடம்பர கார் ( World Luxury Car ), செயல்திறனில் முன்னணியாக இருக்கும் கார் ( World Performance Car), இந்த ஆண்டின் கார் வடிவமைப்பில் முன்னணியாக திகழும் கார் ( World Car Design of the Year).

பரிந்துரைக்கப்பட்ட கார்கள்

2021ஆம் ஆண்டிற்கான உலக முன்னணி கார்- இப்பிரிவுக்கு கீழ் மூன்று பரிந்துரைகள் வெளியாகி உள்ளது. ஹோண்டா-இ ( Honda-e), டொயோட்டா யாரிஸ் ( Toyota Yaris), ஃபோக்ஸ்வேகன் ID.4. ( Volkswagen ID.4.).

உலகத்தின் முன்னணி நகர்புற கார் ( World Urban Car)- இப்பிரிவுக்கு கீழ் மூன்று பரிந்துரைகள் வெளியாகி உள்ளது. ஹோண்டா-இ ( Honda-e), ஹோண்டா ஜாஸ் ( Honda Jazz), டொயோட்டா யாரிஸ் ( Toyota Yaris).

முன்னணி ஆடம்பர கார் ( World Luxury Car )- இப்பிரிவுக்கு கீழ் மூன்று பரிந்துரைகள் வெளியாகி உள்ளது. லேண்ட் ரோவர் டிஃபண்டர் ( Land Rover Defender), மெர்சிடஸ்- பென்ஸ் எஸ்-கிளாஸ் ( Mercedes-Benz S-Class), போல்ஸ்டார் 2 (Polestar 2).

செயல்திறனில் முன்னணியாக திகழும் கார் ( World Performance Car)-இப்பிரிவுக்கு கீழ் மூன்று பரிந்துரைகள் வெளியாகி உள்ளது. ஆடி RS Q8 (Audi RS Q8), பொர்ஷே 911 டர்போ ( Porsche 911 Turbo), டொயோட்டா GR யாரிஸ் (Toyota GR Yaris).

இந்த ஆண்டின் கார் வடிவமைப்பில் முன்னணியாக திகழும் கார்( World Car Design of the Year)- மேலே குறிப்பிட்ட அனைத்து பரிந்துரைகளில் இருக்கும் கார்களும் இந்த பிரிவில் போட்டியிடுகின்றன. கார் வடிவமைப்பில் உலகில் முன்னணியாக இருக்கும் ஏழு நிபுணர்கள் இந்த பிரிவுகளில் வெற்றி பெறும் கார்களை தேர்வு செய்வர். இந்த விருது வழங்கும் விழாவில் புதிதாக ஒரு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மின்சாரத்தில் இயங்கும் முன்னணி வாகனத்திற்கான விருது அது. சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக இப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கவில்லை: முதலமைச்சர்

Saravana Kumar

செல்போனால் நடந்த பயங்கரம்

Saravana Kumar

சூர்யாவை உதைக்கச் சொன்னவரை உதைத்தால் பரிசு : சீமான்

Halley karthi