உலகக்கோப்பை கால்பந்து: தென் ஆப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற மெக்சிகோ…!

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மெக்சிகோ வெற்றி பெற்றுள்ளது.

2026 ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை தொடரான ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறுகிறது. அமெரிக்காவில் 11 நகரங்கள், மெக்சிகோவில் 3 நகரங்கள் மற்றும் கனடாவில் 2 நகரங்கள் என மொத்தம் 16 நகரங்களில் நடைபெறுகிறது.

மெக்சிகோ – தென் ஆப்பிரிக்கா மோதல்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் மெக்சிகோ – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதன. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜூலியன் அண்ட்ரே குவானிஸ் முதல் கோலும் 67வது நிமிடத்தில் மற்றொரு மெக்சிகோ வீரர் ரவுல் ஜெமிஸ் 2 வது கோலும் அடித்தனர். அதேவேளை, மெக்சிகோ வீரர்களின் சாதூர்யத்தால் தென் ஆப்பிரிக்க வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ வெற்றிபெற்றது.

இதையடுத்து, தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் தென்கொரியா – செக் குடியரசு அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இப்போட்டி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.