ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பதிவு செய்த திரைப்படம் ஜெய்லர். நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்த இப்படம் சுமார் 600 கோடிக்கும் மேலாக வசூலித்ததாக தகல்கள் கூறுகின்றன.
ரஜினிக்கு வில்லனாக இப்படத்தில் விநாயகன் நடித்திருந்தார். மேலும் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிரூத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்றன.
ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ஜெய்லர் படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் நடிகர்கள் 2 அம் பாகத்திலும் தொடரும் நிலையில் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட புது நடிகர்களும் நடிக்கின்றனர்.
ஜெய்லர் 1 ஆம் பாகத்தில் கன்னட நடிகர் சிவார்ஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் தோன்றினர். படத்தின் முக்கிய தருணங்களில் வெளிப்பட்ட இவர்களின் கேமியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
அதே போல ஜெய்லர் 2 ஆம் பாகத்திலும் பலர் கேமியோ ரோலில் நடிக்கின்றனர். அதன் படி பாலிவுட் நடிகர் ஷாருக் கானை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சித்தது. ஆனால் அது கைக்கூட வில்லை.
இந்த நிலையில் ஜெய்லர் 2 ஆம் பாகத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாகவும் இதற்கான பின்னணி இசை உருவாக்கத்தில் அனிரூத் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
40 ஆண்டுகளுக்கு பின்
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்துடன் சேர்ந்து ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளார். 1986-ல் வெளியான ‘ பகவான் தாதா’ என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் – ஹிருத்திக் ரோஷன் இணைந்து நடித்திருந்தனர். அதில் குழந்தை ஹிருத்திக் ரோஷன், ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக நடித்திருந்தார்.

‘ஜெயிலர் 2’ படத்தின் ஹிருத்திக் ரோஷனின் காட்சிகள் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னையில் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




