10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்..!

10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது

10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றன.

மொத்தம் உள்ள 12 அணிகள் தலா 6 அணிகள் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும். அரையிறுதியில் வெற்றிபெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் தகுதிபெறும்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – இலங்கை மோதுகின்றன. பெர்மிங்கமில் உள்ள எச்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.