திருக்கோளூர் அகழாய்வு பணியில் சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் கண்டுபிடிப்பு.!!

ஆதிச்சநல்லூரைச் அடுத்த திருக்கோளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.…

ஆதிச்சநல்லூரைச் அடுத்த திருக்கோளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் வகையில், ஆதிச்சநல்லூர் அதனை சுற்றியுள்ள திருக்கோளூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 6 – ஆம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வில், பண்டைய கால மக்கள் பயன்படுத்திய, பல வண்ணங்கள் கொண்ட பாசிகள், சுடுமண் உருவங்கள், செம்பு காசுகள், மெருகேற்றப்பட்ட சிவப்பு, கருப்பு நிறத்திலான பானை உள்ளிட்ட ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் தொல்லியில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.