முதலாவது டி 20 போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு…..!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் மற்ற இரண்டு போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இதன் மூலம் தொடரை 2- 1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி 20 தொடர் இன்று தொடங்குகிறது. அதன் படி முதல்  டி20 போட்டி இன்று நாக்பூரில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் இத்தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் டி 20 போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேபடன் சாண்ட்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

அணி விவரம் 

இந்தியா ; அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் ( கீப்பர் ), இஷான் கிஷன், சூர்ய குமார் யாதவ் ( கேப்டன் ), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன் ), அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து ; டிம் ராபின்சன், டெவோன் கான்வே( கீப்பர் ), ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர்(கேப்டன்), கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜேமிசன், இஷ் சோதி, ஜேக்கப் டஃபி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.