மதுராந்தகம் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த பியூஸ் கோயல் ….!

பிரதமர் மோடி பங்கேற்கும் என்.டி. ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழ் நாட்டில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நாளை மறுநாள் (ஜன. 23) தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதி கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழ் நாடு வருகிறார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் என்.டி. ஏ கூட்டணியில் உள்ள தலைவர்களும் இடம் பெறுகின்றனர். இந்த நிலையில் பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மதுராந்தகத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடி பங்கேற்கும் என்.டி. ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.