முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசத்துக்கு 187 ரன்கள் இலக்கு

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 187 ரன்கள் குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி…

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 187 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சமீபத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நேற்று விலகினார். அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73 ரன்கள் விளாசியுள்ளார். வங்கதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், எபடாட் ஹுசைன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.  தொடர்ந்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நல்ல ஃபார்மில் இருந்து வரும் நிலையில், 186 ரன்களுக்குள் சுருண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இன்றைய போட்டியில், பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாமல் போனாலும், பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு வங்கதேசம் சென்று 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஆடிய போது, வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.