மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ம.நீ.ம. வலியுறுத்தல்

புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்திய கடற்படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மநீம கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.  புதுச்சேரி மீனவர்கள் மீது கடற்படை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை…

புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்திய கடற்படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மநீம கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. 

புதுச்சேரி மீனவர்கள் மீது கடற்படை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து மக்கள் நீதிமய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த வீரவேல், செல்வகுமார், செல்லத்துரை உள்ளிட்ட பத்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கடந்த 15ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் பங்காரம் (INS BANGARAM) பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

காலகாலமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் மத்திய அரசிடம், அதிகார பரவலே நாடு முன்னேற வழிவகுக்கும் சரியான வழி என்று மக்கள் நீதி மய்யம் மாநில சுயாட்சியை வலியுறுத்தி வருகிறது. மாநில சுயாட்சி மட்டுமின்றி அதற்கு அடுத்த நிலையாக கிராமங்களுக்கு உள்ளாட்சியில் தன்னாட்சி வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு இப்போது தொலைக்காட்சி நடத்தும் அதிகாரம்  தனக்கு கீழ்வரும் பிரச்சார் பாரதி நிறுவனத்துக்கே உண்டு என்று அறிவித்திருக்கிறது.

இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்பதால் மக்கள் நீதி மய்யம் இதை வன்மையாக கண்டிக்கிறது. இதனால் ஏற்கனவே மாநில அரசால் நடத்தப்படும் கல்வித்தொலைக்காட்சி தடைபடும் ஆபத்து இருப்பதை மக்கள் நீதி மய்யம் கவலையோடு பார்க்கிறது.

ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொலைக்காட்சி நடத்த அதிகாரம் இருக்கும் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு அந்த அதிகாரம் இல்லை என்பது கேலிக்கூத்தான ஒன்றாகும். மாநில அரசு என்பது மத்திய அரசை அண்டி வாழும் அரசாக இருக்க வேண்டும் என்ற நினைப்பை உடனடியாக மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதை மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் தமிழக அரசு தன் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இந்த அரசு இருக்கும் அதிகாரங்களையும் பறிகொடுத்துவிட்டு ஏமாந்து நிற்ககூடாது என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.