சட்டமன்றத் தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு…!

சட்டமன்ற தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை யொட்டி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கமியூனிஸ்ட் கட்சிக்கு திருத்துறைப்பூண்டி, தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தளி தொகுதியில் டி.ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்து, திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி, பவானிசாகர் தொகுதியில் பிஎல் சுந்தரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் மகாலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.