ஒட்டபிடாரம் தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமி ; புதிய தமிழகம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு………..!

சட்டமன்ற தேர்தலையொட்டி புதிய தமிழகம் கட்சி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பெரும்பாலான கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இதற்கிடையில் கிரிஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தது.

முன்னதாக புதிய தமிழகம் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் புதிய தமிழகம் கோரிய எண்ணிக்கையிலான தொகுதிகளை அதிமுக கொடுக்க முன் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி புதிய தமிழகம் கட்சி சார்பில் 43 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அதே போல திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் ஷியாம் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

இணைப்பு : https://drive.google.com/file/d/1j27ub9Wj8c3nOCDaB3jyK3QInV6K_Mrn/view?usp=sharing

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.