தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு ; 2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய்..!

சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சை கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியில் தமிழகத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்து வருகிறார்..

அதன் படி தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் களமிறங்குகிறார். இதனை தொடர்ந்து பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளன.

மேலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த் தி நகரிலும், செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்திலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், எழும்பூரில் ராஜ்மோகனும் போட்டியிடுகின்றனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.