இரு சக்கர வாகனம் முன்பு பட்டாசுகளை பொருத்தி சாலையில் சாகசம் – திருச்சியில் ஒருவர் கைது!

இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி பட்டாசு வெடித்த இளைஞர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அதி வேகமாக செல்லும் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக வாலிபர்கள்…

இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி பட்டாசு வெடித்த இளைஞர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

அதி வேகமாக செல்லும் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து
லைக்குகளுக்காக வாலிபர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். குறிப்பாக
இரவு நேரங்களில் இது போன்ற பைக் ரேஸ்கள் மற்றும் சாகச பயணங்களைக்
கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு
நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளத்தில் பதிவுகளை
மேற்கொண்டு வைரலாகும்போது சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீதும் கைது நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீப காலமாக காவல்துறை நடவடிக்கையால் இரவு நேரங்களிலும் சாகச பயணங்கள் செய்வது குறைந்து வந்த நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் வாலிபர்கள் ராக்கெட் போன்ற வெடிகளை ஆபத்தான முறையில் சாகசம் செய்து கொண்டே வெடிக்கும் காட்சிகளை சமூக வலைத்தளத்தில் தற்போது பதிவிட ஆரம்பித்துள்ளனர்.

இரவு நேரங்களில் இதுபோன்ற ஆபத்தான முறையில் சாகசம் செய்து கொண்டே வெடிக்கும் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளுக்காக செய்யும் செயல்களை சமூக வலைத்தளம் மூலமாக காவல்துறையில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக நம்பர் பிளேட்டுகளை கழட்டி வைத்துவிட்டு இதுபோன்று வாலிபர்கள் தலைக்கவசம் மாட்டிக் கொண்டு செய்கின்றனர்.

இருப்பினும் மீண்டும் தலை தூக்கி உள்ள வாலிபர்களின் பைக் சாகச பயண வீடியோ
பதிவுகள் குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை
மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என கண்டறியப்பட்டது. மேலும் வீடியோ எடுத்தது, திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார். பைக்கின் முன்பு வான வேடிக்கை பட்டாசுகளை கட்டிக்கொண்டு, மக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.