பிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி : கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!

பிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு கேரளத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளம் மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இதனால் பிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு கேரளத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிலவரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை, ரசிகர்கள் பார்த்துவிட்டு ஒய்வெடுக்கும் வகையில் முதலமைச்சர் சதீசன் அறிவுறுத்தலையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றது. மொத்தம் 48 அணிகள் விளையாடிய இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் முன்னேறின. அதன் படி இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி இன்று இரவு நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.