‘ஜனநாயகன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

ஜூலை 23-ஆம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

நடிகரும், தற்போதை தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் நடித்து, ஹெச்.வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படம் விஜய்யின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டது. இப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் தணிக்கை சான்று கிடைக்காததால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இப்படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தணிக்கை சான்று வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடியது. 

இதனையடுத்து முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை சான்று கிடைக்காததால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தணிக்கைக் குழு ஜனநாயகன் திரைப்படத்திற்கு ‘ஏ சான்றிதழ்’ வழங்கியது. இதனைத்தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படம் வரும் (ஜூலை) 23-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.