தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் ராம். இவரின் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பெற்றுள்ளன.
ராம் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இப்படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
பணிகள் நிறைவடைந்துள்ள இந்த படமானது ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் ரீலீஸ் தேதியை அறிவிக்கும் டீசார் நாளை மாலை 6:33 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.




