INDvsENG: மூன்றாவது ஒருநாள் போட்டி – இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்று கடைசி ஒருநாள் இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.

ஏற்கனவே டி20 தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், ஒருநாள் தொடரையும்கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றன.

அணி விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குர்னூர் பிரார், பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து: பென் டக்கெட், ஜேக்கப் பெத்தல், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோஷ் டங்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.