முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

கொரோனா பயம்: பணம், கடிதம் வைத்துவிட்டு தம்பதி தற்கொலை

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்து போலீஸ் கமிஷனருக்கு தகவல் அனுப்பிவிட்டு தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

மங்களூரு சித்ராபூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் ஆர்யா (40). இவர் மனைவி குணா சுவர்ணா (40). ஆர்யா, டிராவல்ஸ் பிசினஸ் செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நிரிழிவு குறைபாடுள்ள சுவர்ணாவுக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுவர்ணா உயிர்பிழைப்பது கடினம் என அவர்கள் நினைத்தனர்.

இதையடுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர்கள், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பினர். அதில், கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய் தாக்கியுள்ளதால், உயிர்பிழைப்பது கடினம் என நினைக்கி றோம். அதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட போலீஸ் கமிஷனர் அதிர்ச்சியடைந்து, அவர்களை தொடர்புகொள்ள முயன்றார். முடியவில்லை. பிறகு, அப்படி எந்த முடிவுக்கும் செல்ல வேண்டாம், உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என்று மெசேஜ் அனுப்பினார். இதையடுத்து அவர்களின் முகவரியை கண்டுபிடித்து போலீசாரை அனுப்பி வைத்தார். அதற்குள் அந்த தம்பதியினர் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர். போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது, வீட்டில் அவர்கள் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதமும், ஒரு லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. கடிதத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறோம். நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது இறுதிச்சடங்குக்கு ஒரு லட்ச ரூபாயை வைத்துள்ளோம் என்று கூறப்பட்டிருந்தது.

போலீசார் கூறும்போது, சுவர்ணாவுக்கு கண்பார்வை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது இருவருக்கும் மூச்சுத் திணறல் பிரச்னையும் இருந்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல்

Gayathri Venkatesan

“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்”: எல்.முருகன்

Vandhana

பீட்டர்பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Nandhakumar