முக்கியச் செய்திகள் சினிமா

சிகிச்சை முடித்து மீண்டும் படப்பிடிப்பிற்கு…

சமீபத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சிகிச்சையிலிருந்த நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் அவர் எப்போதும் பிசியாக இருக்கிறார்.

இவர் சமீபத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார். தனுஷின் (#D44) 44வது படமான இதை, மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்பட பலர் நடிக்கின்றனர். இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் பிரகாஷ் ராஜ், படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், அவருக்கு படப்பிடிப்பில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ட்விட்டரில் அவர், ‘கீழே விழுந்ததில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. ஐதராபாத் சென்று கொண்டிருக்கிறேன். எனது நண்பரும் மருத்துவருமான குருவா ரெட்டி அறுவை சிகிச்சை செய்யவிருக்கிறார். கவலைப்படத் தேவையில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து தற்போது சிகிச்சையிலிருந்து குணமடைந்து ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதாக இயக்குநர் மணிரத்தினம் மற்றும் நடிகர் கார்த்தியுடன் உள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க கட்சி நிர்வாகிகளுக்கு மநீம தலைவர் கமல் அழைப்பு

Saravana Kumar

நூற்றுக்கணக்கான சாதனைகளை அதிமுக அரசு செய்துள்ளது: முதல்வர் பழனிசாமி

Halley karthi

ரூ.40 ஆயிரம் கோடி கடன் வழங்க நபார்டு திட்டம்!