மதுரை வாடிப்பட்டி அருகே திருமணத்தன்று மணமகனை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அய்யனகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ வன். இவரது இரண்டாவது மகன் பிரதீப். இவருக்கும் உறவினர் மகளுக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு நண்பர்களுடன் மது அருந்த பிரதீப், தமது தந்தையிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இளங்கோவன் பணம் தர மறுத்ததால் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என பிரதீப் கூறியுள்ளார். இதனால் தந்தை மகனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரதீப், கோடாரியால் அவரது தந்தையை வெட்ட முயன்றுள்ளார்.
இளங்கோவன் அதை தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, பிரதீப்பின் கழுத்தில் கோடாரி வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பிரதீப் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வாடிப்பட்டி போலீசார், இளங்கோவனை கைது செய்து. விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபழக்கம் காரணமாக, திருமண வீடு துக்க வீடாக மாறிய சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







